×

இனி வீட்டிலிருந்தே பெறலாம் ₹50,000! திருமண நிதியுதவி திட்டத்தில் முதல்வர் ஸ்டாலினின் மாஸ் அறிவிப்பு..! 

 

சாதி மறுப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு திருமண நிதியுதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும், கைம்பெண்கள், ஆதரவற்றோர்களுக்கு திருமண நிதியுதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.  இதன் மூலம், பயனாளிகளுக்கு ரூ.50,000 பணம்,  8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.   இந்த நிலையில்,  தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களின் பதிவு இந்த திட்டங்களின் மூலம், பொதுமக்கள் எளிய முறையில் சேவைகளை உரிய நேரத்தில் தடையின்றி பெறும் வகையில், Simple Gov மூலம் இணையமயமாக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இத்திட்டங்களுக்கு முறைகளை எளிமைப்படுத்தி உள்ளதால், திட்டத்தின் கண்காணிப்புடன் விரைவாக பொதுமக்கள் பெற விண்ணப்பிக்கும் பயன்களை உரிய இயலும். உரிய ஆவணச்சான்றுகள் சமர்ப்பிக்கப்படும் நேர்வுகளில், நேரடி சரிபார்ப்பு தவிர்க்கப்பட்டு, தாமதம் ஏற்படுவதை தடுக்க முடிகின்றது. மேலும், அலுவலர்கள் விண்ணப்பங்களை காலக்கெடு சரிபார்க்க குறிப்பிட்ட அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும், சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பது குறித்து தெளிவான காரணங்களுடன் தகவல் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது. 

திருமணப் பதிவுச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படும் நேர்வுகளில், வழக்கமான கள ஆய்வு தேவையில்லை என்பதால், விண்ணப்பங்கள் சரி பார்க்கும் நேரம் குறையும். விண்ணப்பம் செய்யும் நாளன்று திருமண பதிவு செய்யப்படாத நேர்வுகளில், வரையறுக்கப்பட்ட 30 நாட்களுக்குள் சரிபார்ப்பு செய்யப்படும் என்பதோடு, குறிப்பிட்ட கால அளவிற்குப் பின் ஏற்படும் தாமதங்கள் கண்காணிக்கப்பட்டு, உடன் நடவடிக்கை எடுக்கப்படும். ஆதரவற்ற பெண்கள் மற்றும் ஏழை விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டங்களில், திருமணம் நடந்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம். 

குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களின் பதிவு மற்றும் புதுப்பிப்பு செயல்முறை தற்போது இணைய முழுமையாக வழியில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதில் தேவையான ஆவணங்களை இணையத்தில் டிஜிட்டல் வடிவில் சமர்ப்பிக்கும் வசதியும், விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை தெரிந்துகொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளன. 

மாவட்ட ஆட்சியர் மற்றும் இயக்குநர் மூலம் குறிப்பிட்ட காலவரையறைக்குள் அனுமதி வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வழங்கப்படும் சான்றிதழ்கள் QR கோடு அங்கீகாரத்துடன் டிஜிட்டல் வடிவில் வழங்கப்படும்.

காவல்துறையின் சரிபார்ப்பு பதிவுகள், மாநில குற்ற ஆவணக் கூடத்தின் (SCRB State Crime Records Bureau) இணையதளம் வழியாக மட்டுமே பெறப்படும்.
கண்காணிப்பை வலுப்படுத்தவும். வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் டிஜிட்டல் பதிவுகள், கண்காணிப்பு டாஷ்போர்டுகள் மற்றும் குறைதீர் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், மேம்படுத்தப்பட்ட இணையதள விண்ணப்பிக்கும் வழிமுறை உருவாக்கப்பட்டு, விரைவில் வெளியிடப்படும். இத்திட்டங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை விளக்கும் விரிவான வழிகாட்டுதல் கையேடு வரும்போது, உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் மூலம்  பெண்ணுக்கு ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், எண்ணற்ற பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பங்களை பெற்று தகுதியான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.