இனி ஜடாயுவுடன் பறக்கலாம், ராவணனுடன் மோதலாம்! வெளியாகிறது மிரட்டலான 'ராமாயணம்' கேம்!
இந்திய இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு, உலகப் புகழ்பெற்ற 'கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ' (GTA) பாணியிலான புதிய ஓப்பன்-வேர்ல்ட் (Open-World) வீடியோ கேம் ஒன்று உருவாகி வருவதாகத் திரைப்படத் தயாரிப்பாளர் நமித் மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய கேமில் இடம்பெறவுள்ள சிறப்பம்சங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்ட அவர், புராணக் கதைகளில் வருவதைப் போல ஜடாயுவுடன் இணைந்து வானில் பறப்பது மற்றும் ராவணனுடன் நேருக்கு நேர் போரிடுவது போன்ற விறுவிறுப்பான காட்சிகள் இதில் வடிவமைக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது கேமிங் பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த வீடியோ கேமின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி மற்றும் கேம்பிளே (Gameplay) தொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் நமித் மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.