×

இனி 'டாஸ்மாக்' மூடும்போது போட்டோ எடுத்து அனுப்பணும்! சென்னை கமிஷனரின் அதிரடி உத்தரவு..!

 

மதுக்கடைகளுக்கு நேரக்கட்டுபாடு குறித்து அனைத்து போஸீஸ் ஸ்டேஷன்களுக்கும் சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 

சென்னையில் டாஸ்மாக் மற்றும் எலைட் டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும். எஃப் 2 மற்றும் எஃப் 3 கடைகள் முறையே இரவு 10 மற்றும் 12 மணிக்குள் மூடப்பட வேண்டும். இந்த கடைகளை ரோந்து குழுவினர் கண்காணித்து புகைப்படங்களை குழுவில் பதிவிட வேண்டும். 

எஃப் 2 மற்றும் எஃப் 3 கடைகள் அனுaமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் நேரத்தை தவிர, வேறு எங்கும் விற்பனை செய்யக் கூடாது. மேற்கண்ட விதிமுறைகள் மீறப்பட்டால் அதற்கான பொறுப்பு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த உத்தரவில் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.