×

இனி வி.சி.க. திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ்., பேரப்பிள்ளை - பொன். ராதாகிருஷ்ணன் சாடல்..!

 

பாஜக முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், திருமாவளவனை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தேர்தலின்போது உறுதி கொடுத்த நிலைப்பாட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழகம் விலகி விட்டது. எனவே, முந்தைய தி.மு.க., ஆட்சியின் நீட்சியாக தான் இந்த அரசை பார்க்க முடியும். மக்கள் வேண்டி விரும்பிய மாற்றத்தை த.வெ.க., அரசு தரவில்லை.
எம்.எல்.ஏ.க்களை விலை பேசி த.வெ.க., தற்போது நடத்தி கொண்டிருப்பது, குதிரை பேர அரசியல் அல்ல; கழுதை பேர அரசியல். எழுச்சியோடு மாற்றத்தை கொண்டு வந்த இளைஞர்களும், மக்களும், பெண்களும், தாங்கள் எதிர்பார்த்த அரசு இது இல்லை என்று கூறி, இந்த அரசை துாக்கி எறியவும் தயங்க மாட்டார்கள். இதை எச்சரிக்கை மணியாக த.வெ.க., உணர வேண்டும்.

கடந்த காலங்களில் முதல்வர் விஜயை ஆர்.எஸ்.எஸ்.,சின் செல்லப்பிள்ளை என வி.சி.க., தலைவர் திருமாவளவன் கூறினார். தற்போது விஜயின் அமைச்சரவையில் வி.சி.க., இடம்பெற்றுள்ளதால், திருமாவளவனை ஆர்.எஸ்.எஸ்.,சின் பேரப்பிள்ளையாக தான் அனைவரும் பார்க்கின்றனர்.