இனி ஆண்டுதோறும் ரூ.4,000.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்கு தமிழக அரசு அதிகாலையிலேய ரூ.5,000 வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தியது. இதனால், பிப்ரவரி 13ஆம் தேதி தமிழகத்தில் உள்ள மகளிருக்கு எல்லாம் இன்ப அதிர்ச்சியை தமிழக அரசு கொடுத்தது.
சட்டப்பேரவை தேர்த்ல் இன்னும் சில மாதங்களில் நடக்க இருப்பதால், இத்திட்டத்தை தேர்தல் ஆணையம் முடக்கிவிடும் என்று கூறி, இந்த தொகை அட்வான்ஸாக தமிழக அரசு பெண்களின் வங்கிக் கணக்கில் வரவை வைத்தது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என மூன்று மாதங்களுக்கு ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 வங்கிக் கணக்கில் தமிழக அரசு நேரடியாக செலுத்தியது. இதனால், பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரே நாளில் 1.31 கோடி மகளிருக்கு ரூ.5,000 தொகை அனுப்பப்பட்டது. இதனால், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
மேலும், 2026ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என திமுக வாக்குறுதியாக கொடுத்திருக்கிறது. இதுவும் பெண்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர அனைத்து பெண்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் தொகை அமைச்சர் கீதா ஜீவன் முக்கிய அறிவிப்பை சட்டப்பேரவையில் இன்று (பிப்ரவரி 19) வெளியிட்டார்.
அதாவது, கோடைக்கால சிறப்பு தொகையாக ரூ.2,000 மகளிருக்கு இனி ஆண்டுதோறும் வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ரூ.5,000 வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, கோடைக்காலத்தில் மக்களுக்கு ஏற்படும் செலவுகளை கருத்தில் கொண்டு, ரூ.2,000 வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
யாருக்கெல்லாம் கிடைக்கும்?
மேலும், இனி ஒவ்வொரு ஆண்டும் மகளிருக்கு ரூ.2,000 கோடைக்கால சிறப்பு தொகை வழங்கப்படும் என அறிவித்தார். கோடைக்கால சிறப்பு தொகை திட்டத்தை என்ற புதிய திட்டத்தை திமுக அரசு வரும் ஆண்டு முதல் கொண்டு வர உள்ளது. எனவே, மகளிர் உரிமைத் தொகை பெற்று வரும் அனைத்து பெண்களுக்கும் கோடைக்கால சிறப்பு தொகையாக ரூ.2,000 ஆண்டுதோறும் கொடுக்கப்பட உள்ளது.
இதன் மூலம், திமுக ஆட்சிக்கு வரும் பட்சத்தில், 2027ஆம் ஆண்டு முதல் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு மே மாதம் ரூ.4,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஏனென்றால், கலைஞர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 2,000 ரூபாயும், கோடைக்கால சிறப்பு தொகையாக ரூ.2,000 என மொத்தம் ரூ.4,000 வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.