×

#BREAKING ‘இனி நடிகர்களுக்கும் படத்தின் லாப, நஷ்டத்தில் பங்கு’

 

செயற்குழு தீர்மானங்கள் வாசிக்கப்பட்ட போது உறுப்பினர்களிடையே மோதல் வெடித்து களேபரமானதால் பரபரப்பு ஏற்பட்டது. 


சென்னை எழும்பூரில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முக்கியமாக ரஜினி, அஜித், தனுஷ், சிம்பு, விஷால் போன்ற முன்னணி நடிகர்கள் வியாபார பங்கிட்டு முறையில் மட்டுமே நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது நடிகர்கள் வருமானத்தில் பங்கு என்ற அடிப்படையில் படத்தின் லாப நஷ்டங்களில் பங்கு பெற வேண்டும். நடிகர்கள், இயக்குநர்கள், முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் வெப் சீரிஸ்களை தவிர்த்து திரைப்படங்கள் மீது கவனங்கள் செலுத்த வேண்டும், நடிகர்களை வைத்து தனியார் அமைப்புகள் நடத்தும் விருது நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சிகளுக்கு உரிய அனுமதி பெற வேண்டும், முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை 8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடியில் வெளியிட வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. 


இதனிடையே செயற்குழு தீர்மானங்கள் வாசிக்கப்பட்ட போது உறுப்பினர்களிடையே மோதல் வெடித்து களேபரமானதால் பரபரப்பு ஏற்பட்டது. செயற்குழு தீர்மானங்கள் வாசிப்பட்டபோது இயக்குநர் பிரவீன்காந்தி உள்ளிட்டவர்கள் ரகளையில் ஈடுபட்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.