இனி உயிரை காக்க வாட்ஸ்அப்-ல் ஒரு "HI" போதும்..! இந்த நம்பரை சேவ் பண்ணி வெச்சுக்கோங்க..!
Mar 8, 2026, 05:30 IST
ஆம்புலன்ஸை வாட்ஸ்அப் மூலம் புக் செய்வது எப்படி?
- பொதுமக்கள் மிக எளிமையாக இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்:
- முதலில் 94450 30725 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணைத் உங்கள் மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள்.
- அவசரத் தேவை ஏற்படும்போது, இந்த எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் 'Hi' என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
- உடனடியாக உங்களுக்கு ஒரு பதில் செய்தி (Reply) வரும். அதில் 'புக் ஆம்புலென்ஸ்’ (Book Ambulance) என்பதைத் தேர்வு செய்யவும்.
- தொடர்ந்து உங்கள் போனில் உள்ள ’செண்ட் லொகேசன்’ (Send Location) வசதி மூலம் தற்போதைய இடத்தை (Live Location) பகிர வேண்டும்.
- உங்கள் கோரிக்கை கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றதும், உடனடியாக அருகிலுள்ள ஆம்புலன்ஸ் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த வசதியின் மூலம் ஆம்புலன்ஸ் வரும் வழித்தடம், ஓட்டுநரின் பெயர் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றை உங்கள் மொபைலிலேயே நேரடியாகத் தெரிந்து கொள்ளலாம். மேலும், ஆம்புலன்ஸ் உங்களை வந்து சேர எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் உடனுக்குடன் அறிய முடியும்.
கிராமப்புறங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் சரியான முகவரியைக் கண்டறிவதில் ஏற்படும் தாமதத்தை இந்தத் தொழில்நுட்பம் பெருமளவு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. "நிமிடங்கள் கூட உயிரைத் தீர்மானிக்கும்" என்பதால், பொதுமக்கள் அனைவரும் இந்த எண்ணைச் சேமித்து வைத்துக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.