×

சினிமாவில் மட்டுமல்ல முதலீட்டிலும் கில்லாடி! - 4 கோடி ரூபாய் சொத்து வரி செலுத்தி ராஷ்மிகா அதிரடி!

 

கன்னட திரையுலகில், 'கிரிக் பார்ட்டி 'படம் மூலம், நடிகையானவர் ராஷ்மிகா மந்தனா. இவர், குடகு மாவட்டத்தை சேர்ந்தவர். முதல் திரைப்படமே வெற்றி அடைந்ததால், அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின், தெலுங்கு திரையுலகில் நுழைந்தார்.ஸ்டார் நடிகர்களுடன் நடித்தார்.

தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் நடித்த ராஷ்மிகா, தற்போது பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர், தன் வருமானத்தை முதலீடு செய்யும் நோக்கில், 2022 ஆகஸ்டில், 'புரொடக்ஷன் எல்எல்பி' என்ற நிறுவனத்தை துவங்கினார். இவர், 2025 - 26 நிதியாண்டில், மிக அதிகமாக சொத்து வரி செலுத்தியுள்ளார்.

இவர், 4 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வரி செலுத்தியுள்ளார். குடகு மாவட்டத்தில், அதிகமான வரி செலுத்தியவர்கள் பட்டியலில், இவர் முதல் இடத்தில் உள்ளார்.