எம்.ஜி.ஆரை போல் எல்லோரும் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்து விட முடியாது -நயினார் நாகேந்திரன்..!
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை முறையாக செய்ய வேண்டியது முதல்-அமைச்சரின் கடமை. விஜய் கட்சி தூய சக்தியா என்பதை தேர்தலில் மக்கள் தான் சொல்ல வேண்டும். விஜய்யின் நோக்கம் தி.மு.க. இருக்கக்கூடாது என்பதுதான்.
தேர்தலில் எத்தனை முனை போட்டி இருந்தால் தி.மு.க.வை வீழ்த்த முடியும் என்பதை உணர்ந்து விஜய் செயல்பட்டால் நல்லது. எம்.ஜி.ஆரை போல் எல்லோரும் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்து விட முடியாது. வரும் தேர்தல் எங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.
பா.ஜனதா கட்சி யாரையும் கூட்டணிக்கு அழைக்காது. த.வெ.க.வுக்கு தேவைப்பட்டால் கூட்டணியில் இணைந்து கொள்ளலாம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதிக்கு எதிராக போலி கையெழுத்து போட்டு தீர்மானம் கொண்டு வந்துள்ளதால், நிச்சயம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.