ஒரு குழந்தை கூட பசியோடு படிக்கக் கூடாது..! - காலை உணவுத்திட்டத்தை 8-ஆம் வகுப்பு வரை நீட்டித்து முதல்வர் விஜய் அதிரடி..!
சமூக நலன் மற்றும மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது.இக்கூட்டத்தில் குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மூத்த குடிமக்களிடம், திட்டங்களை துரிதமாகவும் தடையின்றியும் கொண்டு சேர்க்க வேண்டும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டார். மேலும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கத்திற்கு உள்ளாகாத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்த பழக்கத்திற்கு ஆளான குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு உரிய மறுவாழ்வு அளித்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
முதல்வரின் காலை உணவுத்திட்டத்தை வரும் 17 ம் தேதி முதுல் 6 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.
கடந்த தி.மு.க ஆட்சி காலத்தில் 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் காலை உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டம் தற்போதுவரை நடைமுறையில் உள்ள நிலையில், வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
அதன்படி வரும் செப்டம்பர் 17-ந் தேதி தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்ட உள்ளது. அதன்படி இதுவரை 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே காலை உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த விரிவாக்கத்தின் மூலம் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தின் முடிவில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இக்கூட்டத்தில், சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை ஆகிய துறைகளின் மூலம் குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோரது நலனிற்காகச் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு திட்டங்கள், சமூக சட்டங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் குழந்தைகள் மையங்கள், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய செயல்பாடுகள், மகளிர், குழந்தைகள், மூத்தகுடிமக்கள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கான காலை மற்றும் மதிய உணவுத் திட்டம், அங்கன்வாடி மையச் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை, தொடர்புடைய பயனாளர்களான குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மூத்தகுடிமக்களிடம் தடையின்றி மற்றும் துரிதமாகக் கொண்டு சேர்க்கவேண்டும், குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாகாதபடி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பழக்கத்திற்கு ஆளான குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு உரிய மறுவாழ்வு அளித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி காலை உணவுத் திட்டத்தை' 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விரிவாக்கம் செய்திட முதற்கட்டமாக தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.