×


"விஜய்யோட நம்பர் இருக்கு கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் " - போலீசாரை மிரட்டிய வடக்கு டிரைவர்

 

அத்துமீறிய காவலரிடம் வட இந்திய ஓட்டுனர் "விஜய்யோட நம்பர் இருக்கு கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் "  எனக் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் அந்த வீடியோவில், பில்லிங் மெஷின் உடன் காவலர் ஒருவர் வட இந்திய ஓட்டுநரிடம் லஞ்சம் கேட்கிறார். அதற்கு அந்த ஓட்டுநர் எங்க தளபதி இருக்காரு.. இது எங்க வண்டி காலியா தான் இருக்கு.. பாருங்க சீல் கூட இல்லனு சொல்றார்... இருப்பிணும் போலீஸ்காரர் கேட்க மாட்டேங்குறாரு.. எங்க தளபதி நம்பர் கூட இருக்கு என்கிட்ட... ன்னு சொல்லறாரு.. உடனே அவர் வட இந்திய ஓட்டுநரின் போனை பிடுங்கிவிட்டார்.

"விஜய் தளபதியோட நம்பர் இருக்கு கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் "

அத்துமீறிய காவலரிடம் வட இந்திய ஓட்டுனர் இவ்வாறு சொல்கிறார் என்றால் பாருங்கள் முதலமைச்சரின் விஜய் மீது வட இந்தியர்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று.

முதலமைச்சர் விஜயை பிரதமர் ஆக்காமல் விட மாட்டார்கள் போல. pic.twitter.com/zytBXMOj4J

— Sai Jegadheesh Valeshwari (@saijegadheeshh) July 21, 2026


காக்கி உடையில் இருக்கும் அந்த நபர் எந்த துறையைச் சேர்ந்தவர் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. காவல்துறையினர் காக்கி அல்லது கருப்பு நிற ஸ்ட்ராப் அணிவார்கள், வனத்துறையினர் பச்சை நிறத்திலும், ஆர்டிஓ ஆய்வாளர்கள் நீல நிறத்திலும் ஸ்ட்ராப் அணிவார்கள், ஆனால் தீயணைப்புத் துறையினர் மட்டுமே சிகப்பு வண்ணத்தில் ஸ்ட்ராப் அணிந்திருப்பார்கள். எனவே பில்லிங் மெஷின் உடன் இருக்கும் அந்த நபர் யார் என விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.