5வது குழந்தை.. வீட்டிலேயே பிரசவம் பார்த்த வடமாநில தம்பதி! அதன்பின் நடந்த விபரீதம்
சிவகாசி அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்த அசாம் மாநில தம்பதி-வீட்டில் நடந்த பிரசவத்தை மறைக்க முயற்சித்த கிராம சுகாதார செவிலியரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்து சுகாதார துறை இயக்குனர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சிவகாசி சாரதா நகர் பகுதியில் வசிப்பவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த அப்துல்ஜூலில்- அஷ்மா காத்துன் தம்பதியினர். இவர்க ளிருவரும் இங்குள்ள தனியார் தீப்பெட்டித் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே 9 வயது, 7 வயது, 5 வயது, 3 வயது ஆகிய வயதுகளில் இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில், 5வது முறையாக அஷ்மா காத்துன் கர்ப்பமானார். நிறைமாத கரிப்பிணியான அஷ்மா காத்துனுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே தம்பதிக ளிருவரும் அவர்களாகவே பிரசவம் பார்த்துள்ள னர். அவர்களுக்கு 5-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம்குறித்த தகவலறிந்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சுகாதார துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ வீட்டிற்கு நேரில் வந்த கங்காகுளம் பகுதி கிராம சுகாதார செவிலியர்கிரேஸ் வீட்டில் வைத்து பிரசவம் நடந்ததை உறுதி செய்த போதிலும், உயரதிகாரிகளுக்கு த் தகவல் தெரிவிக்காமல் தாய்- சேய் இருவரையும் ஒரு ஆட்டோவில் எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து பிரசவம் நடந்ததைப் போல உயரதிகாரிகளுக்கு த் தகவல் தெரிவித்துள்ளார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்க்கும்- குழந்தைக்கும் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து தாய் மற்றும் குழந்தை தற்போது சிவகாசி அரசு மருத்துவமனையில் மேல்ச் சிகிச்சைக்காக மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் பற்றி தகவலறிந்த சிவகாசி வட்டார சுகாதாரத் துறையின் துணை இயக்குனர் ஜெகவீரப்பாண்டியன் வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த அப்துல் ஜூலிலை கண்டித்ததுடன், சம்பவத்தை மறைத்து தவறான தகவலளித்த கங்காகுளம் கிராம சுகாதார செவிலியர் கிரேஸ் என்பவரை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.