×

“வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்” – அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

பருவமழையில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. மறுநாளே, விடாது பெய்த கனமழையால் சென்னை வெள்ளக்காடாக காட்சி அளித்தது. அண்ணாசாலை, எழும்பூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட சென்னையில் முக்கிய பகுதியில் மழை நீரால் சூழ்ந்தன. ஒரு நாள் மழைக்கே சென்னை கடும் பாதிப்பை சந்தித்தது மக்களிடையே அச்சத்தை அதிகரிக்கச் செய்தது. இதனிடையே மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த
 

பருவமழையில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மாதம் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. மறுநாளே, விடாது பெய்த கனமழையால் சென்னை வெள்ளக்காடாக காட்சி அளித்தது. அண்ணாசாலை, எழும்பூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட சென்னையில் முக்கிய பகுதியில் மழை நீரால் சூழ்ந்தன. ஒரு நாள் மழைக்கே சென்னை கடும் பாதிப்பை சந்தித்தது மக்களிடையே அச்சத்தை அதிகரிக்கச் செய்தது.

இதனிடையே மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும், சென்னையில் மழைக்கால நடவடிக்கைகளை கண்காணிக்க 16 அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்பட கூடாது என்ற வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த கால வெள்ள பாதிப்புகளை அனுபவமாக கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.