வடகிழக்கு பருவமழை - முதலமைச்சர் ஆலோசனை
Sep 19, 2023, 08:40 IST
பருவமழை காலங்களின் போது குடியிருப்பு பகுதிகளிலும், பிரதான சாலைகளிலும் மழை நீர் தேங்கி, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க சென்னை மாநகரம் முழுவதும் மழைநீர் வடிகால் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கடந்த வருடம் பருவமழைக்கு முன்னதாக குறிப்பிட்ட அளவிலான பணிகள் என்பது முழுமையாக நிறைவு பெற்றதால், அப்போது பல இடங்களில் மழைநீர் தேங்குவது என்பது தவிர்க்கப்பட்டது.
இந்தச் சூழலில் மீதம் இருக்கக்கூடிய இடங்களில் வடகிழக்கு பருவமழைக்கு காலத்திற்கு முன்னதாகவே மழைநீர் வடிகால் பணிகளை முடித்து விட வேண்டும் என்கிற அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு பணி நடைபெற்று வருகிறது.