☰
×

#BREAKING வடக்கிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது- வானிலை ஆய்வு மையம்

 

வடக்கிழக்கு பருவமழை நாளை தொடங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளை அக்டோபர் 15 முதல் தென்னிந்திய தீபகற்பப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுகிறது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாகவும், மழை தீவிரமடையக்கூடும் என்பதால் பொதுமக்கள், மீனவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்றும், நாளையும் விட்டு விட்டு மழை எதிர்ப்பார்க்கலாம். சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் நள்ளிரவு/அதிகாலையில் மழை பெய்யக்கூடும். அக். 20 வரை மழை நிடிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.