×

5 மாதத்திற்கு பின் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பியது!

தமிழகத்தில் மக்களுக்கு தேவையான பல்வேறு தளர்வுகள் கிடைத்துள்ளதால் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. தமிழகத்தில் 7 ஆம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில் வழிபாட்டு தலங்கள், மால்கள், பேருந்துகள், படப்பிடிப்பு உள்ளிட்டவற்றிற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வாகனங்களில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ பாஸ் நடைமுறையை ரத்து அமலாகியுள்ளது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஆரம்பத்தில் இபாஸ் நடைமுறை கடும் நெருக்கடியை கொடுத்த நிலையில் பொதுமக்களின் வேண்டுகோள், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை
 

தமிழகத்தில் மக்களுக்கு தேவையான பல்வேறு தளர்வுகள் கிடைத்துள்ளதால் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

தமிழகத்தில் 7 ஆம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில் வழிபாட்டு தலங்கள், மால்கள், பேருந்துகள், படப்பிடிப்பு உள்ளிட்டவற்றிற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் வாகனங்களில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ பாஸ் நடைமுறையை ரத்து அமலாகியுள்ளது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஆரம்பத்தில் இபாஸ் நடைமுறை கடும் நெருக்கடியை கொடுத்த நிலையில் பொதுமக்களின் வேண்டுகோள், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து இபாஸ் நடைமுறையில் தளர்வு வழங்கப்பட்டன. தற்போது முற்றிலுமாக இபாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பொது போக்குவரத்து இல்லாத நிலையில் மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களை வாடகைக்கு எடுத்து கொண்டு குழுக்களாக சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.