நாங்கள் யாரும் பதவிக்கு ஆசைப்படுவர்கள் கிடையாது - நம்பிக்கை வாக்கெடுப்பில் எஸ்.பி.வேலுமணி பேச்சு..!
த.வெ.க கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தை அ.தி.மு.க எதிர்க்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதை தொடர்ந்து சபாநாயகர் எஸ்.பி.வேலுமணியை பேச அழைத்தால், கூட்டணி சலசலப்பு ஏற்பட்டது.
இதற்கு பதில் அளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், ஒரு உறுப்பினரை பேசுவதற்கு அனுமதி அளிக்க தனக்கு உரிமை உள்ளது, எனது முடிவே இறுதியானது என கூறினார். தொடர்ந்து எஸ்.பி.வேலுமணியை பேசுமாறு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறினார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதனால் சபாநாயகர் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தனது இருக்கையில் இருந்து எழுந்து அனைவரையும் அமர வைத்தார்.
இந்த சூழலில் பேசிய எஸ்.பி. வேலுமணி, "தவெக அரசுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். நாங்கள் பதவிக்கு ஒரு போதும் ஆசைப்பட்டவர்கள் இல்லை. திமுகவை எதிர்த்து தான் அதிமுக தொடங்கப்பட்டது. மக்கள் தீர்ப்புக்கு மதிப்பு அளித்து நாங்கள் அரசு தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கிறோம்" என்றார்.