×

“ஸ்டாலினுக்கு பொய் பேசவதற்கான நோபல் பரிசு” முதல்வர் விமர்சனம்!

ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி 2வது நாளாக இன்று பரப்புரை செய்து வருகிறார். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். அந்த வகையில் ஈரோட்டில் தேர்தல் பரப்புரையை முதல்வர் பழனிசாமி மேற்கொண்டுள்ளார். இன்று 2 ஆம் நாளாக பரப்புரையை ஆரம்பித்துள்ளார். பன்னீர்செல்வம் பார்க்கில் பிரசாரத்தை தொடங்கியுள்ள முதல்வர் பழனிசாமி, ஈரோட்டில் மாவட்ட கழக அலுவலகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். தொடர்ந்து மாரியம்மன் கோயில் வீரப்பன் சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து
 

ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி 2வது நாளாக இன்று பரப்புரை செய்து வருகிறார்.

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். அந்த வகையில் ஈரோட்டில் தேர்தல் பரப்புரையை முதல்வர் பழனிசாமி மேற்கொண்டுள்ளார். இன்று 2 ஆம் நாளாக பரப்புரையை ஆரம்பித்துள்ளார். பன்னீர்செல்வம் பார்க்கில் பிரசாரத்தை தொடங்கியுள்ள முதல்வர் பழனிசாமி, ஈரோட்டில் மாவட்ட கழக அலுவலகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். தொடர்ந்து மாரியம்மன் கோயில் வீரப்பன் சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஈரோட்டில் முதல்வர் பழனிசாமி பேசும் போது, “பொய் பேசுவதற்கான நோபல் பரிசை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கலாம். அதிமுக அரசு மீது பொய்ப் புகார் கூறி ஸ்டாலின் அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகிறார்” என்றார்.

இதை தொடர்ந்து வில்லரசம்பட்டியில் THE WAFER RESORT-ல் தொழில் முனைவோர், வழக்கறிஞர்கள், மருத்துவர்களுடன் ஆலோசிக்கும் முதல்வர் பழனிசாமி, ஊத்துக்குளி, சென்னிமலை பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார். இதையடுத்து ஓடாநிலை பகுதியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் பழனிசாமி, மஞ்சள் விவசாயி, அரசலூரில் மகளிர் சுய உதவிக்குழு, பெருந்துறையில் கைத்தறி மற்றும் விசைத் தறி தொழில் முனைவோர் ஆகியோருடன் சந்திப்பு நிகழ்த்துகிறார். அத்துடன் பெருந்துறையில் இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் முதல்வர் பழனிசாமி. அத்துடன் ஈரோட்டில் முதல்வரின் பரப்புரை முடிகிறது.