திருப்பரங்குன்றத்தில் எந்த அசம்பாவிதமும் இல்லை- உச்சநீதிமன்றத்திற்கு சென்ற ரிப்போர்ட்
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றியபோது முருக பக்தர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இரு தரப்புக்கு இடையே மோதல் வரும் என எதிர்பார்க்கப்பட்டு, 144 தடை விதிக்கபட்ட நிலையில் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப் படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டதை காண, பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர். தீபம் ஏற்றப்பட்டதைக் கண்டதும் பக்தர்கள் பக்தி பரவசத்தில் மூழ்கினர். அந்த நொடியில் மலை உச்சியே பரவசத்தில் மூழ்கியது. பக்தர்கள் "அரோகரா! அரோகரா!" என முழங்க, வாணவேடிக்கைகள் வெடித்து உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. தீபம் ஏற்றுவதற்கு பாதுகாப்பு கொடுத்த CRPF வீரர்களுக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.
பெரும் போராட்டம் மற்றும் பதற்றத்திற்கு மத்தியில் நேற்றைய தினம் திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட்டது. மாநில அரசு கடந்த முறை 5,000-க்கும் மேற்பட்ட போலீசாரை குவித்தது. இரண்டு தரப்பினரிடையே மோதல் உண்டாகும் என 144 தடை உத்தரவையும் பிறப்பித்தது. ஆனால் இந்த முறை தீபம் ஏற்றியபோது முருக பக்தர்கள் அந்த தருணத்தை கொண்டாடினார்களே தவிர, எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. இது குறித்து உச்ச நீதிமன்றத்திற்கும் அறிக்கை அனுப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.