×

#BREAKING  5 வயது வரை டிக்கெட் கட்டணமில்லை - அரசாணை வெளியீடு

 

அரசு பேருந்துகளில் 5 வயது வரை டிக்கெட் கட்டணமில்லை  என்று அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மே 5ம் தேதி போக்குவரத்து துறை மானிய கோரிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது.  அப்போது பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் . அதில் அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கும் ஒன்றிணைந்த பயணிகள் குறைதீர்க்கும் உதவி மையம் ஏற்பாடு செய்யப்படும்.  தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பசுமை பெட்டிகளை வாடகைக்கு விடுதல் , ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டிடம் இல்லா பயணம் செயல்படுத்துதல் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் அரசு பேருந்துகளில் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணம் இல்லை என தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு அரசு பேருந்து கட்டணம் இல்லை என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலுள்ள குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம் . ஏற்கனவே மூன்று வயது வரையிலான குழந்தைகள் கட்டணம் இன்றி பயணித்து வரும் நிலையில் வயதுவரம்பு 5 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐந்து முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் அரை டிக்கெட் எடுத்து பயணிக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.