×

இனி மணமகன் அல்லது மணமகளின் சொந்த ஊரில் திருமணத்தை பதிவு செய்யலாம்!

திருமணங்கள் பதிவு செய்தல் சட்டத்திற்கு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009-ன் படி திருமணப்பதிவு என்பது அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி திருமணம் முடிந்த தம்பதி தங்கள் திருமணத்தை 90 நாட்கள் முதல் 150 நாட்களுக்குள் பதிவுசெய்ய வேண்டும் என்பது நடைமுறை. 150 நாட்களுக்குள் பதிவு செய்யாதவர்கள் பின்னர் எப்போதுமே தங்கள் திருமணத்தை பதிவு செய்திட முடியாது. மேலும் இவர்கள் அரசின் எந்த சலுகையையும் பெற முடியாது. திருமணத்தை பதிவு செய்யாதவர்கள் மீது
 

திருமணங்கள் பதிவு செய்தல் சட்டத்திற்கு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009-ன் படி திருமணப்பதிவு என்பது அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி திருமணம் முடிந்த தம்பதி தங்கள் திருமணத்தை 90 நாட்கள் முதல் 150 நாட்களுக்குள் பதிவுசெய்ய வேண்டும் என்பது நடைமுறை. 150 நாட்களுக்குள் பதிவு செய்யாதவர்கள் பின்னர் எப்போதுமே தங்கள் திருமணத்தை பதிவு செய்திட முடியாது.

மேலும் இவர்கள் அரசின் எந்த சலுகையையும் பெற முடியாது. திருமணத்தை பதிவு செய்யாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடியும் என தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009 சொல்கிறது. இருப்பினும் திருமணம் நடக்கும் இடத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் தான் திருமணத்தை பதிவு செய்ய முடியும். இதனால் கூட சிலர் திருமணத்தை பதிவு செய்ய நேரம் கிடைக்காமல் விட்டு விடுவார்கள்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திருமணங்கள் பதிவு செய்தல் சட்டத்திற்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மணமகன் அல்லது மணமகளின் சொந்த ஊரில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் நடக்கும் இடத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் தான் பதிவு செய்ய முடியும் என்பதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.