"பிக்பாஸ் முத்துக்குமரன் புகாரில் வழக்கு பதிய முகாந்திரம் இல்லை"- காவல்துறை
பிக்பாஸ் முத்துக்குமரன் புகாரில் அவதூறு பரப்பும் கருத்துக்கள் மட்டுமே உள்ளதாக காவல்துறை தரப்பில் பிக்பாஸ் முத்துக்குமரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
முத்துக்குமரன் தன்னை ஏமாற்றியதாக இன்ஸ்டா பிரபலமான பெண் வீடியோ வெளியிட்டிருந்தார். தான் ஏமாற்றிவிட்டதாக சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை காவல் ஆணையரகத்தில் புகாரளித்தார் பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன். அந்த புகாரில் அவதூறு பரப்பும் கருத்துகள் மட்டுமே உள்ளதால் நீதிமன்றத்தை நாடுமாறு முத்துக்குமரனுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் பிக்பாஸ் முத்துக்குமரனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "பிக்பாஸ் முத்துக்குமரன் புகாரில் வழக்கு பதிய முகாந்திரம் இல்லை. புகாரில் அவதூறு பரப்பும் கருத்துகள் மட்டுமே உள்ளது. நீதிமன்றத்தை நாடுக" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் முத்துக்குமரன் பிரபலமானார். இவர மீது சமீபத்தில் இன்ஸ்டாவில் பிரபலமான இளம்பெண் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார். திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்ததாகக் கூறி தவறான முடிவெடுத்து உயிரை விட முயன்றார். இந்த சூழலில் முத்துக்குமரனும் இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். சம்பந்தப்பட்ட இளம் பெண் தரப்பில் எந்தவித புகாரும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் மூலமாக அவ்வப்போது சில பதிவுகளை மட்டும் வெளியிட்டு விமர்சித்து வருகிறார். அப்பெண் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முத்துக்குமரன் புகார் அளித்திருந்தார்.