×

பூந்தமல்லியில் காலேஜே இல்ல : அப்பல்லோ கல்லூரியிடம் பணத்தை இழந்த ஏழை மாணவி!

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சரண்யா என்ற மாணவி குடும்ப சூழல் காரணமாக பகுதி நேர வேலை செய்து கொண்டே படிக்க வேண்டும் என்று எண்ணி வந்துள்ளார். இதனால் அவர் அப்பல்லோ கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் பைனான்சியல் ஆக்கவுண்டிங் படிப்பில் சேர திநகரில் உள்ள கல்லூரியின் அலுவலகத்துக்கு சென்று விசாரணை செய்துள்ளார். அப்போது ஆரம்பத்தில் 6 ஆயிரம் ரூபாய்தான் கல்வி கட்டணம் என்று அலுவலகத்தில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். இதனால் சரண்யா ஆர்வத்துடன் ஆறாயிரம் ரூபாயை கட்டியுள்ளார். பின்னர்
 

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சரண்யா என்ற மாணவி குடும்ப சூழல் காரணமாக பகுதி நேர வேலை செய்து கொண்டே படிக்க வேண்டும் என்று எண்ணி வந்துள்ளார். இதனால் அவர் அப்பல்லோ கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் பைனான்சியல் ஆக்கவுண்டிங் படிப்பில் சேர திநகரில் உள்ள கல்லூரியின் அலுவலகத்துக்கு சென்று விசாரணை செய்துள்ளார்.

அப்போது ஆரம்பத்தில் 6 ஆயிரம் ரூபாய்தான் கல்வி கட்டணம் என்று அலுவலகத்தில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். இதனால் சரண்யா ஆர்வத்துடன் ஆறாயிரம் ரூபாயை கட்டியுள்ளார். பின்னர் 350 ரூபாய் சேர்க்கைக் கட்டணம் , 2,500 ரூபாய் தேர்வு கட்டணம் என மொத்தம் 24 ஆயிரம் ரூபாயை சரண்யாவிடம் கல்லூரி நிர்வாகம் வாங்கியுள்ளது. பூந்தமல்லியில் கல்லூரி இருப்பதாக கூறியதால் பகுதி நேர வேலை செய்ய ஏதுவாக இருக்கும் என்று நம்பிய சரண்யா தனது சக்தியை மீறி 24 ஆயிரம் ரூபாயை கட்டியுள்ளார்.

இதன் பிறகுதான் பூந்தமல்லியில் அப்பல்லோ கல்லூரி ஒன்று இல்லை என்பது சரண்யாவுக்கு தெரியவந்தது. பூந்தமல்லியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் மேவலுர்குப்பம் என்ற இடத்தில் தான் அப்போது கல்லூரி இருந்துள்ளது. அங்கு அரசு பேருந்து வசதியும் முறையாக இல்லாததால் கல்லூரி சென்று வருவது சிரமமாக இருந்து வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா திநகர் அலுவலகம் சென்று பூந்தமல்லியில் அப்பல்லோ இருப்பதாக கூறி ஏமாற்றி விட்டீர்களே என்று சத்தம் போட்டுள்ளார். ஆனால் கூடுதலாக ரூ. 30 ஆயிரம் கட்டணம் செலுத்தினால் கல்லூரி பேருந்தில் சென்று வரலாம் என்று கல்லூரியின் அலுவலகத்தில் கூறியுள்ளனர்.

ஆனால் மேற்கொண்டு 30,000 செலுத்தி பணம் படிக்க வசதி இல்லை என்று கூறிய சரண்யா தனது மாற்று சான்றிதழையும், கட்டிய பணத்தையும் திரும்ப தருமாறு கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தர மறுத்த கல்லூரி நிர்வாகம் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என்று மாணவியையும் அவரது அண்ணனையும் மிரட்டி அனுப்பியதாக தெரிகிறது. இதனால் இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ள சரண்யா தனது சான்றிதழையும், கட்டிய பணத்தை மீட்டுத் தருமாறு புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது