×

குரோம் வேண்டாம்.. சபாரி பயன்படுத்துங்கள்..! - ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை..!

 

ஆப்பிள் நிறுவனத்தை பொறுத்தவரை அது தனது வாடிக்கையாளர்களின் தனியுரிமை பாதுகாப்பில் கடுமையான விதிகளை கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில், உலகம் முழுவதும் உள்ள தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பழைய குரோம், குரோம் வெர்ஷன்களால் பாதுகாப்பு அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதற்கு பதிலாக சபாரி (Safari) உங்கள் தனியுரிமையை பாதுகாக்கும் என ஆப்பிள் கூறியுள்ளது. கூகுள் நிறுவனமும் குரோமை பயன்படுத்த வேண்டாம் என ஆப்பிள் பயனர்களை எச்சரித்துள்ளது.

பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்காத பிரவுசர்கள், சைபர் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்பதால், பயனர்கள் பிரவுசர்களை அடிக்கடி புதுப்பித்து பயன்படுத்த வேண்டும் என தொழில்நுட்ப நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.