☰
×

போலீஸ், சிறை, தீயணைப்பு துறைக்கு 5 ஆண்டு வயது தளர்வு கிடையாது!

 

போட்டித் தேர்வர்கள் வயது உச்ச வரம்பினை 40 வயது வரை உயர்த்துங்கள் என்று கோரிக்கை வைத்ததால், அரசு கவனமுடன் பரிசீலனை செய்து மேலும் 5 ஆண்டு உயர்த்தியுள்ளது. ஆனால் சீருடைப் பணிகளுக்கு 5 ஆண்டு வயது தளர்வு கிடையாது. 

அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC), ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சென்னை/மதுரை துணை, வனச்சரகர் உட்பட அனைத்து துறைகளின் நேரடி நியமன சிறப்பு விதிகள் (Special Rules) மற்றும் தற்காலிக விதிகளில் (Adhoc Rules) உள்ள வயது உச்ச வரம்பிலிருந்து 5 ஆண்டுகள் உயர்த்தப்படுகிறது. வெளியிடப்படும் நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் (30.10.2026 முதல் 29.10.2031 வரை) மட்டுமே இந்த சலுகை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 பொதுப் பிரிவு, பட்டியல் இனத்தவர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், ஆதரவற்ற விதவைகள் அனைத்து வகுப்பினருக்கும் உள்ள ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கும் பொருந்தும். ஆனால் காவல், சிறை, தீயணைப்பு போன்ற சீருடைப் பணிகள் மற்றும் முன்னாள் படைவீரர்களைப் பொறுத்த வரையில், தற்போது நடைமுறையில் உள்ள வயது உச்ச வரம்பு மற்றும் சமூக நீதி தொடரும். அவர்களுக்கு இந்த 5 ஆண்டு தனியாக சேராது. 2016-ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள வயது உச்ச வரம்பு சலுகையோடு கூடுதலாக இந்த 5 ஆண்டு சேரும்.