“கைலாசா முகவரி இதுதான்”- வீடியோ வெளியிட்ட நித்தியானந்தா
கைலாசா என்ற தனி தேசத்தில் உள்ளதாக அறிவித்த நித்தியானந்தா பல ஆண்டுகள் கழித்து அதன் முகவரியை அறிவித்துள்ளார்.
கைலாசா என்கிற தனி நாட்டை உருவாக்கி விட்டதாகவும் அந்த நாட்டிற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருவதாகவும் அடிக்கடி வீடியோக்களில் நித்தியானந்தா பேசி வந்த நிலையில், அண்மைகாலமாக திடீரென்று அவரின் வீடியோக்கள் எதுவும் வெளிவரவில்லை. தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்த நித்தியானந்தா கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் அமைத்து புகழ்பெற்றார். அவர் தற்போது ஈக்வடார் அருகே ஒரு சிறிய தீவில் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருக்கிறார் என்று அவரே அறிவித்தார். நித்தியானந்தா மீது ஆட்கடத்தல், கொள்ளை, ஏமாற்றுதல், கற்பழிப்பு என்று பல வழக்குகள் உள்ளன. சிறை வாழ்க்கைக்கு பயந்து கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தனது சில சீடர்களுடன் தலைமறைவானார்.
The Address of KAILASA Has Been Revealed! A Historic Announcement!
— KAILASA's SPH NITHYANANDA (@SriNithyananda) September 5, 2026
KAILASA has an address now! On the auspicious occasion of Krishna Janmashtami, The Supreme Pontiff of Hinduism Bhagavan Sri Nithyananda Paramashivam formally announces and blesses the inauguration of the KAILASA… pic.twitter.com/eYktpgEdcR
இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து தனது கைலாசாவின் முகவரியை முதன்முறையாக நித்தியானந்தா அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மேற்கு ஆப்பிரிக்கா அருகே அட்லாண்டிக் பெருங்கடலோரம் கினியா பிசாவ்வில் கைலாசா அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.