×

வைரலாகும் நீதா அம்பானியின் புகைப்படம்..! ஒரு பாட்டில் தண்ணீரின் விலை ₹44 லட்சமா?

 

நீதா அம்பானி பயன்படுத்துவதாக கூறப்படும் தண்ணீர் பாட்டில் விலை எவ்வளவு தெரியுமா..? ஜஸ்ட் 44 லட்சம். நீதா அம்பானி பயன்படுத்துவதாக கூறப்படும் அந்த தண்ணீர் பாட்டில், உலகின் விலை உயர்ந்த தண்ணீர் பிராண்டுகளில் ஒன்றான 'அக்வா டி கிரிஸ்டாலோ மோடிலியானி' (Acqua di Cristallo Tributo a Modigliani) என்ற பிராண்டை சேர்ந்தது.

ஒரு தண்ணீர் பாட்டிலின் அதிகபட்ச விலையே ரூ.20-தான். ஆனால் இந்த தண்ணீர் பாட்டிலின் விலை ரூ. 44 லட்சம். இதை உங்களால் நம்பமுடியாமல் இருக்கலாம் ஆனால் இது உண்மை. சுமார் 750 மில்லி தண்ணீர் கொண்ட இந்த பாட்டிலுக்கு ஏன் இவ்வளவு விலை தெரியுமா? . இந்த பாட்டில் 24 கேரட் தங்கத்தால் ஆனது. பிரபல பாட்டில் வடிவமைப்பாளர் ஃபெர்னான்டோ அல்டமிரனோ என்பவரால் இந்த பாட்டில் வடிவமைக்கப்பட்டது.


எதிர் துருவங்களில் இருக்கும் பிரான்ஸ், பிஜி நாடுகளிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் இந்த பாட்டிலில் நிரப்பப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பருகினால் அதிக உத்வேகம் கிடைக்கும். மேலும் அதிக சுவையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுவே இந்த விலைக்கு ஒரு முக்கிய காரணம். மேலும் இதுபோலவே ஜப்பான் நாட்டில் விற்கப்படும் ’கோனா நிகரி’ என்ற தண்ணீர் பாட்டில் ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஹவாய் தீவின் ஆழ்கடலில் சுமார் 2000 மீட்டர் ஆழத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த தண்ணீரில் பல நன்மைகள் இருக்கிறது என்று கூறப்படுகிறது.


ஒரு பாட்டில் தண்ணீர் ரூ.44,95,830 லட்சத்திற்கு விற்கப்படுகிறதாம்.. இதுதான் உலகிலேயே விலைமதிக்க முடியாத குடிநீர் பாட்டில் ஆகும்.. இந்த தண்ணீர் பாட்டில் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது... பாட்டில் சுமார் 750 மில்லி தண்ணீர் கொண்டது. ஆனால், அந்த தண்ணீர் பாட்டிலில் அப்படி என்ன ஸ்பெஷல்? மொத்தமும் சுத்த தங்கத்தால் ஆனது.

சமூக வலைதளங்களில் நீதா அம்பானி இந்த பாட்டிலில் தண்ணீர் அருந்துவதாக ஒரு புகைப்படம் வைரலானதால் இது நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது. இந்த ஒரு பாட்டிலின் விலையே 44 லட்சம் ரூபாய். உலகின் மிக விலை உயர்ந்த தண்ணீர் பாட்டில் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கு மூன்று காரணம் ஒன்று இதில் இருக்கும் தண்ணீர் உலகிலேயே மிக தூய்மையானது, தங்கம் கலந்திருப்பது மற்றும் தங்கம் முலாம் பூசப்பட்ட பாட்டிலாக இருப்பது.