“கலைஞர் செய்த துரோகம்தான் ”- நிர்மல்குமார்
கச்சத்தீவு விவகாரத்தில், வழக்குகளை காட்டி திமுகவை ஒன்றிய அரசு மிரட்டி பணிய வைத்ததாக அமைச்சர் C.T.R. நிர்மல் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கலைஞர் தன் வழக்குக்காக கண்ணை மூடிக்கொண்டு கச்சத்தீவை தாரை வார்த்தார். கலைஞர் நினைத்திருந்தால் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதை தடுத்திருக்கலாம். வழக்கு உள்ளிட்ட காரணங்களால் கலைஞரின் ஒப்புதலுடனயே கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. கைவிட்டுப் போன பிறகு தீர்மானம் போட்டு என்ன பயன்? உண்மையை சொன்னால் திமுகவினருக்கு கோபம் வருகிறது. Reels போடுவதற்காக பேசுகிறோம் என்கிறார்கள். மக்களுக்கு செய்த துரோகத்தைதான் சொல்கிறோம். உங்களின் அனைத்து வழக்குகளையும் சொல்லி மிரட்டி உங்களைப் பணிய வைத்தார். அந்த மிரட்டலுக்குத் தனியாகப் பணிந்து, யாருக்கும் தெரியாமல் நீங்களும் ஒத்துக்கொண்டுவிட்டீர்கள்... அவர்கள் நினைத்திருந்தால், கச்சத்தீவு தாரைவார்க்கப்படுவதை தடுத்திருக்கலாம். சென்னையில் 3 ஆண்டுகளில் 15 துணை மின் நிலையங்களமைக்கப்படும்.
கச்சத்தீவை தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்தது என்பது சரிதான், ஆனால் தமிழக அரசு என்ன செய்தது? 1974-இல் பாராளுமன்ற விவாதம் வந்தபோது மாரிசாமி இதுபற்றி தெரியாது என்றார். ராமநாதபுரம் மக்கள் இவ்வளவு கஷ்டப்படுவதற்கு காரணம் கச்சத்தீவை தாரை வார்க்கதுதான்” என்றார்.