☰
×

அன்பில் மகேஷிடம் பணம் கொடுத்ததற்கான ஆதாரம் உள்ளது - அமைச்சர் நிர்மல்குமார்

 

திமுக இனி 10 தொகுதிகளில் கூட ஜெயிக்காது என அமைச்சர் நிர்மல்குமார் சவால் விடுத்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "இப்ப ஜெயிச்சிருக்கதுல 10 தொகுதிகளில் கூட இனி திமுக ஜெயிக்காது. எப்போது தேர்தல் வந்தாலும் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து 200 தொகுதிகளுக்கு மேல் கண்டிப்பாக ஜெயிக்கும். கடந்த திமுக ஆட்சியில் தீபாவளியன்று பெரிய அளவிலான மின்வெட்டு இருந்தது. இந்த முறை மின்வெட்டு இல்லாமல் பார்த்துக் கொள்ள ஆய்வு செய்துள்ளோம். தேவையில்லாமல் மின்வெட்டு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளோம். 

அன்பில் மகேஷிடம் பணம் கொடுத்ததற்கான  ஆதாரம் உள்ளது. ஆதாரம் இல்லாமல் யாரையும் கைது செய்யவில்லை. இது ஒரு நாளில் நடைபெறும் பிரச்சனை இல்லை, இரண்டு வருஷமாக நடைபெறும் கலெக்ஷன். அதிகாரப்பூர்வமாக பல கல்வி நிறுவனங்களில் இருந்து புகார் அளித்துள்ளனர். முதல்வர் விஜய் கடந்த 6 மாதங்களாக ஓய்வின்றி உழைத்து வருகிறார்.  தினமும் 14 முதல் 15 மணி நேரம் வரை பணியாற்றுகிறார்" என்றார்