முதலமைச்சர் எலும்பை உடைப்பேன் என விளாத்திகுளம் எம்.எல்.ஏ பேசலாமா..? - நிர்மல்குமார்
நீட் தேர்வு தேவையில்லை என்பதே எங்கள் நிலைபாடு அமைச்சர் சி.டி நிர்மல்குமார் கூறியுள்ளார்.
சென்னை தலைமை செயலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “நீட் தேர்வு என்பது இருக்கக் கூடாது என்பது தான் த.வெ.க அரசின் நிலைப்பாடு..
ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது தவெகவினர் யாரும் கொலைமிரட்டல் விடுக்கவில்லை. திமுக ஆட்சியில் ட்வீட் போட்டவர்கள் எல்லாம் குண்டாசில் கைது செய்யப்பட்டனர்.திமுக ஆட்சியில் சபரீசன், உதயநிதிக்கு எதிராக பேசினால் குண்டாஸ் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் ஒரே நபர் மீது 30,40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
முதலமைச்சர் எலும்பை உடைப்பேன் என விளாத்திகுளம் எம்.எல்.ஏ பேசலாமா..? முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுவது சட்டம், ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும். திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் காரில் ஏறி மயக்கம் வருவதாக கூறி நாடகமாடுகிறார்.ஒரு எம்.எல்.ஏவை எப்படி கைது செய்ய வேண்டும் என காவல்துறைக்கு தெரியும். மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேகதாது அணை விவகாரம் குறித்து துறை சார்ந்த நிபுணர்களுடன் முதலமைச்சர் விஜய் நேரடியாக ஆலோசனை நடத்தினார். அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் விலகி வருவது எப்படி குதிரை பேரம் ஆகும்?
மின்கட்டணத்தை கணக்கிட 5500 பேர் தேவை. ஆனால் நம்மிடம் 800 பேர் மட்டுமே உள்ளனர். கூடுதலாக மின் கட்டணம் செலுத்தியிருந்தால் அடுத்த முறையில் கழித்து கொள்ளப்படும். மின்சார பயன்பாட்டை முறையாக கணக்கீடு செய்யுமாறு கூறியது பொதுவான சுற்றறிக்கை. தாம்ரத்தில் கூடுதல் மின் கட்டணம் என எழுந்த புகார் குறித்து மறு ஆய்வு செய்ய கூறியுள்ளோம். 7,8 இடங்களில் மட்டுமே கூடுதல் மின் கட்டணம் என புகார்கள் வந்துள்ளன. மின் கணக்கீட்டில் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளோம்” என்றார்.