”கட்சியை யாரிடமாவது கொடுத்துவிட்டு எடப்பாடி ஒதுங்க வேண்டும்”- நிர்மல்குமார்
எடப்பாடி பழனிசாமியின் தவறால் அதிமுக அதல பாதாளத்தில் சென்றுவிட்டது; அவர் தவறை உணர வேண்டும் என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “அதிமுக அழிய எடப்பாடி பழனிசாமி தான் காரணம். எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியைச் சேலத்தில் மூட்டை கட்டி வைத்துவிட்டு மாவட்டச் செயலாளர் போல உட்கார்ந்துள்ளார். தவறை உணர்ந்து, ஜானகி கட்சியை ஜெயலலிதாவிடம் கொடுத்தது போல் கட்சியை யாரிடமாவது கொடுத்துவிட்டு எடப்பாடி விலக வேண்டும். சுயநலத்திற்காக கட்சியை பயன்படுத்தியபோதே கட்சி அழிந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமியின் தவறால் அதிமுக அதல பாதாளத்தில் சென்றுவிட்டது; அவர் தவறை உணர வேண்டும்.
நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி சிறை வார்டன்களால் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமல்ல, இதில் தொடர்புடைய யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தது யாராக இருந்தாலும், அமைச்சரான நானாக இருந்தாலும் இந்த அரசு காப்பாற்றது. இதுபோன்ற அத்துமீறல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்திலும் சம்பந்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.