“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரனம்”- நிர்மல் குமார்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை சார்ந்த 200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 4 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் நிர்மல் குமார் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “மத அரசியலை தமிழகம் விரும்பாது.. தலைவரும் விரும்பமாட்டார். தமிழகத்தில் என்றும் மதத்தை வைத்து அரசியல் செய்ய தமிழக மக்களுக்கும் விரும்ப மாட்டார்கள். எங்கள் தலைவரும் விரும்ப மாட்டார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் சட்டப்பூர்வமான தீர்வை கொண்டுவருவோம். கடந்த திமுக ஆட்சியில் தவறாக கையாண்டதன் விளைவுதான் இந்த பிரச்சினையை இவ்வளவு தூரம் கொண்டுவந்து விட்டிருக்கிறது. மேகத்தாது விவகாரத்தை தி.மு.க சரியாக கையாளவில்லை.
மின்வெட்டு பிரச்சனையை தீர்க்க மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. மின்சார கட்டமைப்பில் 12 ஆண்டு பின்னோக்கி உள்ளது. சீரமைத்துவருகிறோம். 4 நாட்களாக எங்கெல்லாம் மின் தடை என ஆராய சென்னையில் 500 பேர் கொண்ட குழு இரவு முழுவதும் ரோந்து செல்கின்றனர். கடந்த ஆட்சியில் மின் மாற்றிகள் போன்ற உபகரணங்கள் வாங்கப்படாமல், பழையதை வைத்தே மின்சார விநியோகம் செய்ததால், தற்போது அவை தனது சக்தியை இழந்து மின் தடை ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் நேற்று 29 இடங்களில் ஏற்பட்ட மின் தடையை மின்வாரியம் சீரமைத்துள்ளது” என்றார்.