"விஜய் என்னை சந்திக்க வேண்டாம்னு இபிஎஸ் சொன்னார்"- அமைச்சர் நிர்மல்குமார்
முதலமைச்சர் விஜய்யின் திருச்சி உரை எப்படி இருந்தது என்பது மக்களுக்கு தெரியும் என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “இவர்கள், அவர்கள் என பிரித்து பார்க்கவில்லை. அனைவரையும் முதல்வர் விஜய் சந்திக்க விரும்பினார்.
எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அப்போது நேரம் கேட்கப்பட்டது. தனிப்பட்ட காரணங்களுக்காக சந்திக்க வேண்டாம் என ஈபிஎஸ் கூறிவிட்டார். அரசியல் சூழல் கருதி, ஒரு சிலர் சந்திப்பது சரியாக இருக்காது என கூறினர். முதலமைச்சர் விஜய் அடிக்கடி மக்களை சந்திப்பார். முதலமைச்சர் விஜய்யின் திருச்சி உரை எப்படி இருந்தது என்பது மக்களுக்கு தெரியும்.மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஏதேதோ சொல்லி கொண்டுதான் இருப்பார்கள். போதைப்பொருள் புழக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படாது.
ஆட்சிக்கு வந்த 2 வாரத்தில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திமுக தூண்டுதலின் பேரில் தான் விவாசாயிகள் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.விவாசாயிகள் நலனுக்காக முதல்வர் நாள்தோறும் போராடிவருகிறார். பயிர்க்கடன் தள்ளுபடியால் 80% விவசாயிகள் பலன் அடைகின்றனர். தனிப்பட்ட குற்றங்களுக்கு தமிழக அரசை எப்படி குறை கூற முடியும்?அனைத்து துறைகளுகளிலும் பிரச்சனைகளை களைய உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது” என்றார்.