தவெக 100% குதிரை பேரம் செய்யவில்லை- நிர்மல்குமார்
தவெக குதிரை பேரம் செய்யவில்லை, செய்யவேண்டிய அவசியமும் இல்லை என அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “தவெக குதிரை பேரம் செய்யவில்லை, செய்யவேண்டிய அவசியமும் இல்லை. இப்போது தேர்தல் நடந்தாலும் 200 தொகுதிகளில் தவெக வெல்லும். கட்சிகளில் இருக்கும் நிலையையும், குழப்பத்தையும் பார்த்து அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்கிறார்கள். அதிமுக தலைமை மீது நம்பிக்கை இல்லாததால் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா செய்துவிட்டுதான் எங்களை சந்திக்கிறார்கள். மாவட்ட செயலாளர்களை சந்தித்துவிட்டு தவெகவில் இணையுங்கள் என அறிவுறுத்திவருகிறோம். தவெகவினர் ஆய்வு நடத்தவில்லை, பொதுமக்கள்தான் ஆய்வு நடத்துகின்றனர். மேகதாது விவகாரத்தில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்
தேவையில்லாமல் மின் தடை ஏற்படுத்தினால் காவல்துறையில் புகார் அளிக்கப்படும். கடந்த ஆட்சியில் தனிநபர், நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதாக இன்றைய கூட்டத்தில் ஒப்பந்ததாரர்கள் புகார் அளித்தனர். இனிவரும் காலங்களில் ஒப்பந்ததாரர்களுக்கு தகுதி அடிப்படையில் அனைத்து நிறுவனங்களுக்கும் மின் வாரிய டெண்டர். தனிநபர், குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சாதகமாக டெண்டர் இனி தொடராது. மின் துறையில் டிஜிட்டல் போர்ட்டல் மூலம் வெளிப்படையான டெண்டர் ஏற்படுத்தப்படும். கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. மின் துறையில் ஓராண்டுக்குள் சீர்திருத்தங்கள் செய்யப்படும். வெளிப்படையான முறையில் விண்ணப்பங்கள் - தகுதி அடிப்படையில் வாய்ப்பு அளிக்கப்படும்” என்றார்.