×

அமைச்சர் சரத் மீது நடவடிக்கையா?- நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி

 

தமிழ்நாட்டில் எங்கும் மின்வெட்டு இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேட்டியளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “கடந்த காலங்களை விட வெப்ப அளவு அதிகரித்துள்ளதால் மின்சார தேவை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு யூனிட் மின்சாரத்தை தோராயமாக ரூ.20க்கு வாங்குகிறோம். காற்றாலை மின்சாரம் குறைந்ததே மின்சார தட்டுப்பாட்டிற்கு காரணம். மின்சார பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று காற்றாலை மின்சாரம் மேலும் குறைந்ததால் 1500 மெகாவாட் மின்சாரம் பொதுதொகுப்பிலிருந்து வாங்கியுள்ளோம்

தாம்பரம் மாநகராட்சியில் அசோக சின்னம் சிலை அமைக்கப்பட்டது தொடர்பான புகார் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட அமைச்சர் என்பதாலேயே சரத் அந்த சிலையை திறந்து வைத்திருக்கிறார். இந்த விவகாரத்தில் விசாரணையின்போது உண்மை இருப்பது தெரிந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.