×

மக்களின் கைகளில் பணம் புரளும் - நிர்மலா சீதாராமன்

 

ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களின் கைகளில் அதிக பணத்தை மிச்சப்படுத்தும் என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற ஜிஎஸ்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்தூகொண்டு பேசிய இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “GST சீர்திருத்தம் மூலம் 12% அடுக்கிலிருந்த பொருட்கள், 5%க்கு மாற்றப்பட்டுள்ளன. 28% அடுக்கிலிருந்த பொருட்கள், 18% வரம்புக்குள் வந்துள்ளன. இதனால் இந்திய பொருளாதாரத்திற்குள் ரூ.2 லட்சம் கோடி செலுத்தப்படும். ஜிஎஸ்டி சீர்திருத்தம் காரணமாக மக்கள் கைகளில் பணம் புழங்கும். கூட்டாட்சி ஒத்துழைப்புக்கு ஜிஎஸ்டி கவுன்சில் சிறந்த உதாரணமாக உள்ளது. 

ஜிஎஸ்டியால் ஒரு மாதத்திற்கு ரூ.1.9லட்சம் கோடி வரி வசூலிக்கப்படுகிறது. அதில் 23 சதவீதம் மட்டுமே ஒன்றிய அரசுக்கு கிடைக்கிறது. மீதமுள்ள 77 சதவீதம் நிதி மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. பிரதமர் மோடி கேட்டு கொண்டதற்கிணங்க வரி குறைக்கப்பட்டது” என்றார்.