×

சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து நெய்மர் அதிகாரப்பூர்வ ஓய்வு அறிவிப்பு!

 

பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 16வது சுற்று ஆட்டத்தில் நார்வே அணிக்கு எதிரான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் பிரேசில் அதிர்ச்சியை தோல்வியை சந்தித்தது.

இதனை ஏற்றுக் கொள்ள முடியாத 34 வயதான நட்சத்திர வீரர் நெய்மர், கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதையடுத்து, சர்வதேச போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது.

இந்த நிலையில், சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் வீரர் நெய்மர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தென் அமெரிக்காவின் கோபா சுடாமெரிகானா தொடரில் வெனிசுலாவின் யுனிவர்சிடாட் அணிக்கு எதிராக நெய்மரின் சாண்டோஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றது. அதன்பிறகு, அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது; பிரேசில் அணியுடனான எனது காலம் முடிந்துவிட்டது. நான் வரலாற்றைப் படைத்துள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். எனது ரத்தத்தையும், உயிரையும் கொடுத்து விளையாடினேன். மஞ்சள் ஜெர்சியில் (பிரேசில் அணி) இனிமேல் விளையாட எனக்கு விருப்பமில்லை, எனக் கூறினார். இதன்மூலம், இனி சர்வதேச போட்டிகளில் விளையாட மாட்டேன் என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.5 முறை உலகக்கோப்பை சாம்பியனான பிரேசில் அணிக்காக , நெய்மர் 16 ஆண்டுகள் விளையாடியுள்ளார். சர்வதேச கால்பந்து அரங்கில் 130 போட்டிகளில் விளையாடி 80 கோல்களையும், 59 முறை கோல் அடிக்க உதவியும் செய்துள்ளார்.

நெய்மரின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.