×

திருமணம் முடிந்த கையோடு B.Ed பருவத் தேர்வுகள் எழுதிய புதுமண பெண்கள்

 

தஞ்சையில் திருமணம் நடைபெற்ற கையோடு இரு புதுமண பெண்கள் பி.எட் பருவத் தேர்வுகள் எழுதினர்.

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் பி.எட் பருவத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பல்வேறு கல்லூரிகளுக்கு தேர்வு மையமாக அமைக்கப்பட்டு மாணவ - மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். இதேபோல் சோழபுரம் பகுதியை சேர்ந்த மதுமிதா என்ற மாணவிக்கு கருணாகரன் என்பவருடன் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடந்து முடிந்த கையோடு மாணவி மணக்கோலத்தில் வந்து தேர்வு எழுதினார்.

இதேபோல் கரம்பயம் பகுதியை சேர்ந்தவர் சத்யகீதா. இவருக்கு அய்யப்பன் என்பவருடன் இன்று காலை திருமணம் நடைபெற்ற நிலையில், அவரும் திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதினார். ஒரே தேர்வு மையத்தில் இரண்டு புதுமணப் பெண்கள் மணக்கோலத்தில் தேர்வு எழுதியதை சக தேர்வர்கள் பாராட்டினர்.