×

கண்ணகி நகர் அரசு  மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறையால் பச்சிளங்குழந்தை உயிரிழப்பு

 

கண்ணகி நகர் மருத்துவமனையில் பிரசவ வலியுடன் வந்த பெண்ணுக்கு உடனடி சிகிச்சை கிடைக்காததால் பச்சிளம் குழந்தை உயிரிழந்திருக்கிறது. தாய் உயிருக்கு போராடுவதாகவும் கூறப்படுகிறது.

சென்னை கண்ணகி நகர் பகுதியில் சுமார் 23,704 வீடுகள் உள்ளன. லட்சக்கானோர் வசிக்கும் இப்பகுதியில் உள்ள  24 மணி நேரமும் செயல்படும் நகர்ப்புற அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத கொடுமை அரங்கேறி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி அங்கு ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் கூட இல்லாதது பெரும் துயரம்.

"மருத்துவர் இல்லாததால் மீண்டும் ஒரு உயிரிழப்பா?"

கண்ணகி நகர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால், பிரசவ வலியுடன் வந்த பெண் மாற்று மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்ததாக குற்றச்சாட்டு. தாய் உயிருக்கு போராடி வருவதாக தகவல்.#Kopase #KannagiNagarpic.twitter.com/oiPyztrxXT

— கொ ப செ | Ko Pa Se (@Kopaseindia) June 10, 2026


கண்ணகி நகர் சமுதாய நல வாழ்வு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் மேலும் ஒரு உயிரிழப்பு நேர்ந்துள்ளது. இன்று காலை பிரசவ வலியுடன்  ஒரு பெண் கண்ணகி நகர் CHC சென்றுள்ளார். அங்கு டாக்டர்கள் இல்லை. ஒரு மணி நேரம் கழித்து அவரை கோஷா ஹாஸ்பிடல் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்துள்ளனர். அங்குள்ள மருத்துவமனை உதவியாளர், அப்பெண்ணை கோஷா ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றதும் குழந்தையின் உயிர் பிரிந்தது. தாய் உயிருக்காக தற்பொழுது போராடிக் கொண்டிருக்கிறார்.  ஓராண்டிற்கு முன்பு இதே போல் இன்னொரு பெண்மணிக்கு நடந்து அவர் உயிர் பிரிந்தது. அன்றும் கண்ணகி நகர் மக்கள் போராடினர். இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மருத்துவமனை தரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. 24 மணி நேர மகப்பேறு பார்க்கும் சமுதாய நல வாழ்வு மருத்துவமனை என்று சொல்லிவிட்டு மருத்துவர்கள் இல்லாமல் ஒவ்வொரு முறையும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் இங்கு நடந்துகொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.