புத்தாண்டிலும் போராட்டம் : புத்தாண்டு தினத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது!
Jan 1, 2026, 12:47 IST
சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஐந்து மாதங்களாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் புத்தாண்டு தினத்திலும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சூளை கண்ணப்பர் திடலில் இருந்து ரிப்பன் மாளிகை நோக்கி அவர்கள் பேரணியாக சென்றனர்.
அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். தொடர்ந்து வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட தூய்மை பணியாளர்களை நடுரோட்டில் வலுக்கட்டாயமாக இறக்கி விட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
மேலும் புத்தாண்டு நாளில் அரசு தங்களை வஞ்சித்ததாகவும் தூய்மை பணியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.