ஹோட்டல், ரிசார்ட்களில் நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டம் நடத்த கூடாது- காவல்துறை
ECR, OMR மற்றும் GST சாலைகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் Beach Resorts உணவகங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 12.30 மணிக்கு மேல் எந்தவித நிகழ்ச்சியும் கொண்டாட்டங்களும் நடத்தக்கூடாது என செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளான ECR, OMR & GST மற்றும் மாவட்டத்தின் பலமுக்கிய சந்திப்புகள் உட்பட மொத்தம் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபடுத்தப்படுவாரகள். மாவட்டத்தில் மிக முக்கிய இடங்கள், கோயில்கள், தேவாலயங்கள் போன்றவற்றிற்கு ரோந்து காவலர்கள் நியமித்து தீவிர ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். மாவட்டத்தில் புத்தாண்டு SP-1, ADSP-1, DSP-7, Inspr - 25 மற்றும் 530 காவலர்கள என மொத்தம் 564 காவல அதிகாரிகள்/ஆளிநர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்தல் கூடாது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வரும் நபர்கள் மதுபோதையில் வாகனத்தை இயக்கக்கூடாது மீறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனஙகள் பறிமுதல் செய்யப்படும்.
புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் திருவிடந்தை முதல் கடப்பாக்கம் வரையிலான கடற்கரை பகுதிகளில் கடலில் இறங்கி குளிக்கவும் மற்றும் படகில் கடலுக்குள் அழைத்து செல்வதையும் தடைசெய்யப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகள முறையே திருவிடந்தை மற்றும் SSN கல்லூரி அருகில் வாகன தணிக்கை செய்யப்பட்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான உணவகம் / தங்கும் விடுதிகளில் முறையான முன்பதிவு பெற்ற நபர்கள் மட்டுமே மாமல்லபுரம் பகுதிக்கு அனுமதிக்கப்படும்.