×

தஞ்சை அருகே புதிய சுங்கச்சாவடி- ஜூன் 12ல் திறப்பு! 

 

கும்பகோணம் அருகே மானம்பாடி என்ற இடத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடி எதிர்வரும் பனிரெண்டாம் தேதியில் இருந்து செயல்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் - கும்பகோணம் - விக்கிரவாண்டி இடையே புதிதாக அமைக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சாவூர் அருகே வேம்புக்குடி என்ற இடத்தில் ஏற்கனவே சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வேம்புக்குடி என்ற இடத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் மானம்பாடி என்ற இடத்தில் மேலும் ஒரு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 50 கிலோ மீட்டர் இடைவெளியில் இரண்டு சுங்கச்சாவடிகள் அமையப் பெற்றுள்ளது. மானம்பாடி என்ற இடத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் கட்டண விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை இன்னும் வைக்கப்படவில்லை. தஞ்சை விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சுங்கச்சாவடியில் கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் ஒரு முறை பயணிக்க ரூ.105 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.