×

பழனியில் கூட்டநெரிசல் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய புதிய சேவை அறிமுகம்

 

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் வலைதளம் மூலம் அல்லது கியூ ஆர் கோடு மூலம் அல்லது திருக்கோவில் ஆப் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்யலாம்.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினசரி வருகை புரிந்து,  சாமி தரிசனம் செய்வது வழக்கம்.  தரிசனத்திற்காக முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலை  கோயிலுக்கு செல்ல படிப்பாதை,  யானை பாதை பிரதான வழியாக உள்ளது. அத்துடன் மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது .விரைவாகவும்,  இயற்கை அழகை ரசித்த படியும் ரோப் கார்  மற்றும் மின் இழுவை ரயிலில் செல்லலாம்.


இந்நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் வலைதளம் மூலம் அல்லது கியூ ஆர் கோடு மூலம் அல்லது திருக்கோவில் ஆப் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி  பக்தர்களின் வசதி மற்றும் நலன் கருதி http://palanimurugan.hrce.tn.gov.in/ என்ற வலைதளத்தின் மூலமும், மேற்கண்ட கியூஆர் கோடு அல்லது Thirukovil app என்ற கைப்பேசி செயலி மூலமும் தரிசன டிக்கெட் பெற்றுக்கொண்டு சாமி தரிசனம் செய்யலாம்.