×

ரூ.450 கோடியில் தமிழகத்திற்கு புதிய தலைமைச் செயலகம்! எங்கு தெரியுமா?

 

ரூ.450 கோடியில் தமிழகத்திற்கு புதிய தலைமைச் செயலகம் அமைக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்திற்கு, இட நெருக்கடியின் காரணமாக முதலமைச்சரின் அலுவலகம், முதலமைச்சரின் செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் அறை மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் நிலவும் கடும் இடநெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில், தலைமைச் செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்றும் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. முன்னதாக ஜெயலலிதா மற்றும் மு.கருணாநிதி ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு, தமிழக அரசால் முன்னெடுக்கப்படும் மூன்றாவது பெரும் முயற்சி இதுவாகும். புதிய தலைமைச் செயலக வளாகத்திற்கான இறுதி இடம் இதுவரை அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்படவில்லை என்றாலும், பட்டினப்பாக்கம் மற்றும் கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் உள்ளிட்ட சில முக்கிய பகுதிகளை தமிழக அரசு உன்னிப்பாகப் பரிசீலித்து வருகிறது. இதற்கான முறையான அறிவிப்பு நடப்பு கூட்டத்தொடரிலேயே சட்டப்பேரவையில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.