×

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்: 15% அளவுக்கு கல்விக் கட்டணம் உயர வாய்ப்பு!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா தொற்றால் பள்ளிகள் தற்போது திறக்கப்படும் சாத்தியமில்லை என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்
 

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா தொற்றால் பள்ளிகள் தற்போது திறக்கப்படும் சாத்தியமில்லை என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுளதாக கல்விக் கட்டண நிர்ணய குழு அறிவித்துள்ளது. வரும் 20ம் தேதி முதல் பரிந்துரைகளை ஆன்-லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் 15% அளவுக்கு கல்விக் கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.