×

37 அரசு கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் - உயர்கல்வித்துறை அறிவிப்பு!
 

 


37 அரசு கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்களை நியமித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் இருந்து பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, இந்து சமய அறநிலையத் துறை ஆகிய துறைகளில் பல திட்டங்கள் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன .குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 10 கலை மற்றும் அறிவியல், கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது .அது முதற்கட்டமாக சென்னை கொளத்தூர், திருச்செங்கோடு ,திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ,விளாத்திகுளம் ஆகிய நான்கு இடங்களில் கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அத்துடன்  உயர்கல்வி தரத்தை உயர்த்த அரசு திட்டமிட்டு வருகின்றது.

இந்நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் கல்வியியல் கல்லூரிகள் போட்டித்தேர்வு பயிற்சி கல்லூரிகள் என்று பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றி வந்த முப்பத்தி ஏழு பேருக்கு பதவி உயர்வு வழங்கி முதல்வர்களாக நியமித்தது உயர் கல்வித்துறை. புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் உடனடியாக பணியில் சேரவும் உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தி உள்ளார்.