×

TNPSC-க்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அரசு துறைக்கு தேவையான அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.   தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய  செயலாளராக ச. கோபால் சுந்தரராஜ் ஐஏஎஸ் பணியாற்றி வருகிறார். 


 

இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (TNPSC) 5 புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.பி. சிவனருள், முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஆர்.சரவணகுமார், சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஏ.தவமணி, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த உஷா, கோவை ஸ்ரீநாராயணகுரு மேலாண்மை கல்வி நிறுவன முதல்வர் முனைவர் ஆர்.பிரேம்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.