பள்ளி பாடத்திட்டம் மாற்றியமைப்பு - மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய நிபுணர் குழு அமைப்பு
தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடத்திட்ட குழுவின் தலைவராக The Moonman of India, முன்னாள் இஸ்ரோ தலைவர், டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு திமுக ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட குழுவை கலைத்து, புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்ட வடிவமைப்பு குழுவின் தலைவராக மயில்சாமி அண்ணாதுறை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த குழு 4 - 12-ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை நிர்ணயம் செய்யவுள்ளது. மயில்சாமி அண்ணாதுரை அனுபவமும், அறிவியல் பார்வையும் புதிய பாடத்திட்டத்தில் பிரதிபலித்தால் அது மாணவர்களின் எதிர்காலத்திற்கு பயனுள்ள மாற்றமாக அமையும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அறிவியல் சிந்தனை வளர்த்தல், புதுமை மற்றும் படைப்பாற்றலை ஊக்குவித்தல், நடைமுறை அறிவை வாழ்க்கையுடன் இணைத்தல், விண்வெளி மற்றும் தொழில்நுட்ப அறிமுகம், தமிழ் மூலமாக தரமான கல்வி, மாணவர் மையக் கற்றல் உள்ளிட்டவை புதிதாக அமைக்கப்படும் புதிய பாடத்திட்டத்தின் நோக்கமாக இருக்கும் என நம்பபடுகிறது.