கொளத்தூர் தொகுதிக்கு புதிய மாவட்ட செயலாளர்கள்?
Aug 28, 2026, 18:11 IST
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு வசமுள்ள கொளத்தூர் தொகுதிக்கு திமுக புதிய மாவட்ட செயலாளரை நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு வசமுள்ள கொளத்தூர் தொகுதிக்கு திமுக புதிய மாவட்ட செயலாளரை நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மு.க.ஸ்டாலின் தோல்விக்கு சேகர்பாபுதான் காரணம் என திமுகவினர் குற்றச்சாட்டு வைத்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் திமுகவிற்கு 6 மாவட்ட செயலாளர்கள் என இருந்த எண்ணிக்கை 10ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை வடக்கு மாவட்டத்திற்குள் கொளத்தூர், பெரம்பூர் தொகுதிகள் கொண்டுவரப்பட்டதால் புதிய மாவட்ட செயலாளரை நியமிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.