தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்: நவம்பர் 2-ல் ஆந்திரா அருகே கரையை கடக்கிறது!
Updated: Oct 31, 2026, 15:48 IST
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை:
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக் கடல், அதை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுகள், அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து இருக்கிறது.
அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்;
நவ.,2ம் தேதி புயல் ஆந்திரக் கடற்கரையை கடக்கும்.
வரும் 2ம் தேதி, நீலகிரி மாவட்டத்தில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வட கிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடலில் உருவாகும் 2வது புயல் இதுவாகும்.